Brands
YSTV
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
Yourstory
search

Brands

Resources

Stories

General

In-Depth

Announcement

Reports

News

Funding

Startup Sectors

Women in tech

Sportstech

Agritech

E-Commerce

Education

Lifestyle

Entertainment

Art & Culture

Travel & Leisure

Curtain Raiser

Wine and Food

Videos

ys-analytics
ADVERTISEMENT
Advertise with us

அமேசானில் விற்பனை செய்ய புதிய கட்டண நடைமுறை - ஏப்ரல் 7 முதல் அமலாகிறது!

பணவீக்கம், வட்டிவிகித மாற்றங்களால் விற்பனையாளர்களுக்கான கட்டணத்தை மறுகட்டமைப்பு செய்துள்ளதாக மிகப்பெரிய இணைய வர்த்தக நிறுவனமான அமேசான் தெரிவித்துள்ளது.

அமேசானில் விற்பனை செய்ய புதிய கட்டண நடைமுறை - ஏப்ரல் 7 முதல் அமலாகிறது!

Monday March 25, 2024 , 2 min Read

இணைய வர்த்தக சேவையில் முன்னணி நிறுவனமாக விளங்குகிறது அமேசான். பெரும்பாலான வாடிக்கையாளர்கள் மற்றும் விற்பனையாளர்களை இணைக்கும் தளமாக இயங்கும் அமேசான், பணவீக்கம், வட்டிவிகிதங்கள் மற்றும் தொழில்துறையில் நிலவும் கட்டண கட்டமைப்புகளைச் சமன் செய்யும் விதத்தில் விற்பனையாளர்களுக்கான கட்டணத்தில் திருத்தங்களை கொண்டு வந்துள்ளதாக கடந்த சனிக்கிழமைஅறிவித்துள்ளது.

ஏப்ரல் 7ம் தேதி முதல் விற்பனையாளர்களுக்கு திருத்தப்பட்ட கட்டணங்கள் நடைமுறைக்கு வருகின்றன. இந்த கட்டண மறுசீரமைப்பானது பரிந்துரைக்கட்டணம் (referral fee), இறுதிக் கட்டணம் (closing fee) மற்றும் எடைகளைக் கையாள்வதற்கான கட்டணம் உள்பட அனைத்துக் கட்டணங்களிலும் விற்பனையாளருக்கு மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

“சந்தையின் நிலவரத்துக்கு ஏற்பவும், மேக்ரோ பொருளாதார காரணிகளான பணவீக்கம், வட்டி விகிதங்கள், பொருட்களை கையாள்வதற்கான கட்டணங்கள் உள்ளிட்டவற்றை கருத்தில் கொண்டே கட்டண மறுசீரமைப்பானது செய்யப்பட்டுள்ளது,“ என்று அமேசான் நிறுவனம் தெரிவித்துள்ளது.
அமேசான்

ஆடைகள், மெத்தை விரிப்புகள், தலையணை உரைகள் மற்றும் உணவு மேஜைப் பொருட்கள் உள்ளிட்டவற்றிற்கான பரிந்துரைக்கட்டணமானது குறைய வாய்ப்புள்ளது. அதே சமயம், வணிகம் மற்றும் விஞ்ஞானத்திற்கான உபகரணங்கள், சிம்னிகள், லேப்டாப் பைகள் மற்றும் டயர் உள்ளிட்ட பிரிவுகளில் உள்ள பொருட்களின் விலை அதிகரிக்கும் என்று அமேசான் குறிப்பிட்டுள்ளது.

“ரூ.1,000க்கு மேற்பட்ட சராசரி விற்பனை விலையில் உள்ள பொருட்களின் இறுதிக் கட்டணம் ரூ.3 வரை அதிகரிக்கப்படும். பொருட்களின் ஷிப்பிங் கட்டண உயர்வு காரணமாக எடையை கையாள்வதற்கான கட்டணம் ரூ.2 அதிகரிக்கப்படுகிறது,” என்று அமேசான் கூறியுள்ளது.

“விற்பனையாளர் கட்டணங்கள் மற்றும் ஊக்கத்தொகைகளே உறுதியான நீண்ட-கால ஓட்டத்திற்கான அங்கீகாரம் அதனை அமேசான் வழங்குகிறது. சந்தையில் ஒரு நிலைத்தன்மையை உருவாக்க இவை உதவுகின்றன, மேலும் சிறு மற்றும் நடுத்தர தொழில்களை டிஜிட்டல் மூலம் நாடு முழுமைக்கும் கொண்டு செல்வதனால் அவற்றை ஸ்திரமான தேசிய பிராண்டாக உருவாக்க நாங்கள் வழி செய்கிறோம் என்று அமேசான் தெரிவித்துள்ளது.

amazon
“இந்த மாற்றங்கள் நாங்கள் விற்பனையாளர்களுக்கு எந்த அளவில் அக்கறையுடன் செயல்படுகிறோம் என்பதை எடுத்துக் காட்டுகிறது. இந்தியாவில் சிறப்பான விற்பனை செய்வதற்கும், விற்பனையாளர்கள் தடையின்றி வளர்ச்சியடையவும் சிறந்த தேர்வு Amazon.inone, விற்பனையாளர்களின் வளர்ச்சிக்குத் தேவையானதை உருவாக்கித் தரும் விருப்பமான சந்தைகளில் ஒன்றாக நாங்கள் திகழ்கிறோம்,” என்று அமேசான் இந்தியா செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

தொழில்நுட்ப கட்டணங்கள், பொருட்களைக் கொண்டு சென்று பேக்கிங் செய்வதற்கான கட்டணம் உள்பட இதர கட்டணங்கள், கட்டணமில்லா நிறைவேற்று கொள்கை (Zero Fee fulfilment policy) நீக்கப்பட்டுள்ளது. எடை கையாள்வதற்கான கட்டணமானது இனி ரூ.20,000க்கும் மேற்பட்ட தரப்படுத்தப்பட்ட ஷிப்மெட்டுகளுக்கான கட்டணமாக வசூலிக்கப்படும். கட்டண வகைகளின் பட்டியலுக்கு ஏற்ப 18%ஜிஎஸ்டி வசூலிக்கப்படும் என்றும் அமேசான் தெரிவித்துள்ளது.