நிகர லாபத்தில் சாதனை படைத்த ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்!
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் அதன் முக்கிய எண்ணெய் மற்றும் பெட்ரோ கெமிக்கல்ஸ் வர்த்தகத்தின் மீட்பு மற்றும் நுகர்வோர் தொடர்புடைய தொலைத்தொடர்பு மற்றும் சில்லறை வணிகங்கள் வேகமெடுத்தும் நேர்மறை அம்சங்கள் இருந்தும் மார்ச் மாதம் முடிந்த நான்காம் காலாண்டின் நிகர லாபத்தில் மாற்றம் இல்லை.
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் அதன் முக்கிய எண்ணெய் மற்றும் பெட்ரோ கெமிக்கல்ஸ் வர்த்தகத்தின் மீட்பு மற்றும் நுகர்வோர் தொடர்புடைய தொலைத்தொடர்பு மற்றும் சில்லறை வணிகங்கள் வேகமெடுத்தும் நேர்மறை அம்சங்கள் இருந்தும் மார்ச் மாதம் முடிந்த நான்காம் காலாண்டின் நிகர லாபத்தில் மாற்றம் இல்லை என்று அறிவித்துள்ளது.
2023-24 நிதியாண்டின் ஜனவரி-மார்ச் காலாண்டில் ரிலையன்ஸின் நிகர லாபம் ரூ.18,951 கோடி அல்லது ஒரு பங்கிற்கு ரூ.28.01 ஆக உள்ளது. , இது ஓராண்டிற்கு முன்பு ரூ.19,299 கோடி அல்லது ஒரு பங்கிற்கு ரூ.28.52 ஆக இருந்தது என்று ஆர்.ஐ.எல். நிறுவனம் பங்குச்சந்தையில் தாக்கல் செய்த தகவல் கூறுகிறது.
எண்ணெய் விலை உயர்வால் நிறுவனத்தின் வருவாய் 11% அதிகரித்து ரூ.2.64 லட்சம் கோடியாக உள்ளது. 2023-24 நிதியாண்டில் ரிலையன்ஸின் நிகரலாபம் ரூ.69,621 கோடியாக அதிகரித்துள்ளது. கடந்த நிதியாண்டில் இதே நிகர லாபம் ரூ.66,702 கோடியாக இருந்தது.
2024ஆம் நிதியாண்டில் ரூ.10 லட்சம் கோடி விற்பனை அளவை எட்டிய முதல் இந்திய நிறுவனமாக உள்ளது ரிலையன்ஸ். அதாவது முந்தைய ஆண்டை ஒப்பிடும் போது இது 2.6% அதிகம். முந்தைய ஆண்டில் விற்பனை ரூ.9.74 லட்சம் கோடியாக இருந்தது குறிப்பிடத்தக்கது.